Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

80) Sūrat `Abasa

Printed format

80) سُورَة عَبَسَ

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
`Abasa Wa Tawallá 80-1 அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். عَبَسَ ‌وَتَوَلَّى
'An Jā'ahu Al-'A`má 80-2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, أَ‌نْ ج‍‍َ‍ا‌ءَهُ ‌الأَعْمَى
Wa Mā Yudrīka La`allahu Yazzakká 80-3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? وَمَا‌ يُ‍‍دْ‌ر‍ِ‍ي‍‍كَ لَعَلَّ‍‍هُ يَزَّكَّى
'Aw Yadhdhakkaru Fatanfa`ahu Adh-Dhikrá 80-4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம். أَ‌وْ‌ يَذَّكَّرُ‌ فَتَ‍‌‍نْ‍‍فَعَهُ ‌ال‍‍ذِّكْ‍رَ‌ى
'Ammā Mani Astagh 80-5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ- أَمَّ‍‍ا‌ مَنِ ‌اسْتَ‍‍غْ‍‍نَى
Fa'anta Lahu Taşaddá 80-6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர். فَأَ‌نْ‍‍تَ لَ‍‍هُ تَ‍‍صَ‍‍د‍ّ‍َ‌ى
Wa Mā `Alayka 'Allā Yazzakká 80-7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை. وَمَا‌ عَلَ‍‍يْ‍‍كَ ‌أَلاَّ‌ يَزَّكَّى
Wa 'Ammā Man Jā'aka Yas`á 80-8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ, وَ‌أَمَّ‍‍ا‌ مَ‍‌‍نْ ج‍‍َ‍ا‌ءَكَ يَسْعَى
Wa Huwa Yakhshá 80-9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக- وَهُوَ‌ يَ‍‍خْ‍‍شَى
Fa'anta `Anhu Talahhá 80-10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர். فَأَ‌نْ‍‍تَ عَ‍‌‍نْ‍‍هُ تَلَهَّى
Kallā 'Innahā Tadhkiratun 80-11 அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். كَلاَّ‌ ‌إِنَّ‍‍هَا‌ تَذْكِ‍رَةٌ
Faman Shā'a Dhakarahu 80-12 எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். فَمَ‍‌‍نْ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌ذَكَ‍رَهُ
Şuĥufin Mukarramatin 80-13 (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. فِي صُ‍‍حُفٍ‌ مُكَ‍رَّمَةٍ
Marfū`atin Muţahharatin 80-14 உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது. مَرْفُوعَةٍ‌ مُ‍‍طَ‍‍هَّ‍رَةٍ
Bi'aydī Safaratin 80-15 (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்- بِأَيْدِي سَفَ‍رَةٍ
Kirāmin Bararatin 80-16 (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். كِرَ‍‌ام ٍ‌ بَ‍رَ‌‍رَةٍ
Qutila Al-'Insānu Mā 'Akfarahu 80-17 (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! قُ‍‍تِلَ ‌الإِ‌نْ‍‍س‍‍َ‍انُ مَ‍‍ا‌ ‌أَكْفَ‍رَهُ
Min 'Ayyi Shay'in Khalaqahu 80-18 எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) مِ‍‌‍نْ ‌أَيِّ شَ‍‍يْءٍ‌ خَ‍‍لَ‍‍ق‍‍َ‍‍هُ
Min Nuţfatin Khalaqahu Faqaddarahu 80-19 (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். مِ‍‌‍نْ نُ‍‍طْ‍‍فَةٍ خَ‍‍لَ‍‍قَ‍‍هُ فَ‍‍قَ‍‍دَّ‌‍رَهُ
Thumma As-Sabīla Yassarahu 80-20 பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான். ثُ‍‍مَّ ‌ال‍‍سَّب‍‍ِ‍ي‍‍لَ يَسَّ‍رَهُ
Thumma 'Amātahu Fa'aqbarahu 80-21 பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான். ثُ‍‍مَّ ‌أَمَاتَ‍‍هُ فَأَ‍قْ‍‍بَ‍رَهُ
Thumma 'Idhā Shā'a 'Ansharahu 80-22 பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். ثُ‍‍مَّ ‌إِ‌ذَ‌ا‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌أَ‌نْ‍‍شَ‍رَهُ
Kallā Lammā Yaqđi Mā 'Amarahu 80-23 (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. كَلاَّ‌ لَ‍‍مَّ‍‍ا‌ يَ‍‍قْ‍‍‍‍ضِ مَ‍‍ا‌ ‌أَمَ‍رَهُ
Falyanžuri Al-'Insānu 'Ilá Ţa`āmihi 80-24 எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். فَلْيَ‍‌‍نْ‍‍‍‍ظُ‍‍ر‍ِ‍‌ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انُ ‌إِلَى‌ طَ‍‍عَامِهِ
'Annā Şabab Al-Mā'a Şabbāan 80-25 நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். أَنَّ‍‍ا‌ صَ‍‍بَ‍‍بْ‍‍نَا‌ ‌الْم‍‍َ‍ا‌ءَ‌ صَ‍‍بّ‍‍اً
Thumma Shaqaq Al-'Arđa Shaqqāan 80-26 பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- ثُ‍‍مَّ شَ‍‍قَ‍‍قْ‍‍نَا‌ ‌الأَ‌رْ‍ضَ شَ‍‍ق‍‍ّ‍‍اً
Fa'anbatnā Fīhā Ĥabbāan 80-27 பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். فَأَ‌نْ‍‍بَتْنَا‌ فِيهَا‌ حَ‍‍بّ‍‍اً
Wa `Inabāan Wa Qađbāan 80-28 திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- وَعِنَبا‌ ً‌ ‌وَ‍قَ‍‍ضْ‍‍باً
Wa Zaytūnāan Wa Nakhlāan 80-29 ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - وَ‌زَيْتُونا‌ ً‌ ‌وَنَ‍‍خْ‍‍لاً
Wa Ĥadā'iqa Ghulbāan 80-30 அடர்ந்த தோட்டங்களையும், وَحَد‍َ‍‌ائِ‍‍قَ غُ‍‍لْباً
Wa Fākihatan Wa 'Abbāan 80-31 பழங்களையும், தீவனங்களையும்- وَفَاكِهَة ً‌ ‌وَ‌أَبّ‍‍اً
Matā`āan Lakum Wa Li'an`āmikum 80-32 (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, مَتَاعا‌ ً‌ لَكُمْ ‌وَلِأَ‌نْ‍‍عَامِكُمْ
Fa'idhā Jā'ati Aş-Şākhkhatu 80-33 ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - فَإِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ءَتِ ‌ال‍‍صَّ‍‍اخَّ‍‍ةُ
Yawma Yafirru Al-Mar'u Min 'Akhīhi 80-34 அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - يَ‍‍وْمَ يَفِ‍‍ر‍ّ‍ُ‌ ‌الْمَرْ‌ءُ‌ مِ‍‌‍نْ ‌أَ‍خِ‍‍يهِ
Wa 'Ummihi Wa 'Abīhi 80-35 தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; وَ‌أُمِّ‍‍هِ ‌وَ‌أَبِيهِ
Wa Şāĥibatihi Wa Banīhi 80-36 தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- وَ‍صَ‍‍احِبَتِ‍‍هِ ‌وَبَنِيهِ
Likulli Amri'in Minhum Yawma'idhin Sha'nun Yughnīhi 80-37 அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். لِكُلِّ ‌امْ‍‍رِئٍ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ يَوْمَئِذ‌‌ٍ‌ شَأْنٌ‌ يُ‍‍غْ‍‍نِيهِ
Wujūhun Yawma'idhin Musfiratun 80-38 அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். وُج‍‍ُ‍وهٌ‌ يَوْمَئِذ‌ٍ‌ مُسْفِ‍رَةٌ
Đāĥikatun Mustabshiratun 80-39 சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். ضَ‍‍احِكَةٌ‌ مُسْتَ‍‍بْ‍‍شِ‍رَةٌ
Wa Wujūhun Yawma'idhin `Alayhā Ghabaratun 80-40 ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். وَ‌وُج‍‍ُ‍وهٌ‌ يَوْمَئِذٍ‌ عَلَيْهَا‌ غَ‍‍بَ‍رَةٌ
Tarhaquhā Qataratun 80-41 அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். تَرْهَ‍‍قُ‍‍هَا‌ قَ‍‍تَ‍رَةٌ
'Ūlā'ika Humu Al-Kafaratu Al-Fajaratu 80-42 அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْكَفَ‍رَةُ ‌الْفَجَ‍رَةُ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah