Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

44) Sūrat Ad-Dukhān

Printed format

44) سُورَة الدُّخَان

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Ĥā-Mīm 44-1 ஹா, மீம். حَا-مِيم
Wa Al-Kitābi Al-Mubīni 44-2 தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! وَ‌الْكِت‍‍َ‍ابِ ‌الْمُبِينِ
'Innā 'Anzalnāhu Fī Laylatin Mubārakatin ۚ 'Innā Kunnā Mundhirīna 44-3 நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். إِنَّ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلْن‍‍َ‍اهُ فِي لَيْلَةٍ‌ مُبَا‌‍رَكَة‌‍ٍۚ ‌إِنَّ‍‍ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ مُ‍‌‍ن‍‍ذِ‌رِينَ
Fīhā Yufraqu Kullu 'Amrin Ĥakīmin 44-4 அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. فِيهَا‌ يُفْ‍رَقُ كُلُّ ‌أَمْرٍ‌ حَكِيمٍ
'Aman Min `Indinā ۚ 'Innā Kunnā Mursilīna 44-5 அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். أَمْر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِنَ‍‍اۚ ‌إِنَّ‍‍ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ مُرْسِلِينَ
Raĥmatan Min Rabbika ۚ 'Innahu Huwa As-Samī`u Al-`Alīmu 44-6 (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். رَحْمَة ً‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۚ ‌إِنَّ‍‍هُ هُوَ‌ ‌ال‍‍سَّم‍‍ِ‍ي‍‍عُ ‌الْعَلِيمُ
Rabbi As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā ۖ 'In Kuntumqinīna 44-7 நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). رَبِّ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَمَا‌ بَيْنَهُمَ‍‍اۖ ‌إِ‌نْ كُ‍‌‍نْ‍‍تُمْ مُوقِ‍‍نِينَ
Lā 'Ilāha 'Illā Huwa Yuĥyī Wa Yumītu ۖ Rabbukum Wa Rabbu 'Ābā'ikumu Al-'Awwalīna 44-8 அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான். لاَ‌ ‌إِلَهَ ‌إِلاَّ‌ هُوَ‌ يُحْيِي ‌وَيُم‍‍ِ‍ي‍‍تُ ۖ ‌‍رَبُّكُمْ ‌وَ‌‍رَبُّ ‌آب‍‍َ‍ائِكُمُ ‌الأَ‌وَّلِينَ
Bal HumShakkin Yal`abūna 44-9 ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். بَلْ هُمْ فِي شَكٍّ‌ يَلْعَبُونَ
Fārtaqib Yawma Ta'tī As-Samā'u Bidukhānin Mubīnin 44-10 ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக. فَا‌رْتَ‍‍قِ‍‍بْ يَ‍‍وْمَ تَأْتِي ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءُ‌ بِدُ‍خَ‍‍انٍ‌ مُبِينٍ
Yaghshá An-Nāsa ۖdhā `Adhābun 'Alīmun 44-11 (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்." يَ‍‍غْ‍‍شَى‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ۖ هَذَ‌ا‌ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
Rabbanā Akshif `Annā Al-`Adhāba 'Innā Mu'uminūna 44-12 "எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்). رَبَّنَا‌ ‌اكْشِفْ عَ‍‍نَّ‍‍ا‌ ‌الْعَذ‍َ‍‌ابَ ‌إِنَّ‍‍ا‌ مُؤْمِنُونَ
'Anná Lahumu Adh-Dhikrá Wa Qad Jā'ahum Rasūlun Mubīnun 44-13 நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார். أَنَّ‍‍ى‌ لَهُمُ ‌ال‍‍ذِّكْ‍رَ‌ى‌ ‌وَ‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ ‌‍رَس‍‍ُ‍ولٌ‌ مُبِينٌ
Thumma Tawallaw `Anhu Wa Qālū Mu`allamun Majnūnun 44-14 அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர். ثُ‍‍مَّ تَوَلَّوْ‌ا‌ عَ‍‌‍نْ‍‍هُ ‌وَ‍قَ‍‍الُو‌ا‌ مُعَلَّمٌ‌ مَ‍‍جْ‍‍نُونٌ
'Innā Kāshifū Al-`Adhābi Qalīlāan ۚ 'Innakum `Ā'idūna 44-15 நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே. إِنَّ‍‍ا‌ كَاشِفُو‌ا‌الْعَذ‍َ‍‌ابِ قَ‍‍لِيلا‌‌ ًۚ ‌إِنَّ‍‍كُمْ ع‍‍َ‍ائِدُ‌ونَ
Yawma Nabţishu Al-Baţshata Al-Kubrá 'Innā Muntaqimūna 44-16 ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம். يَ‍‍وْمَ نَ‍‍بْ‍‍‍‍طِ‍‍شُ ‌الْبَ‍‍طْ‍‍شَةَ ‌الْكُ‍‍بْ‍‍‍رَ‌ى‌ ‌إِنَّ‍‍ا‌ مُ‍‌‍ن‍‍تَ‍‍قِ‍‍مُونَ
Wa Laqad Fatannā Qablahum Qawma Fir`awna Wa Jā'ahum Rasūlun Karīmun 44-17 அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார். وَلَ‍قَ‍‍دْ‌ فَتَ‍‍نَّ‍‍ا‌ قَ‍‍بْ‍‍لَهُمْ قَ‍‍وْمَ فِ‍‍رْعَ‍‍وْنَ ‌وَج‍‍َ‍ا‌ءَهُمْ ‌‍رَس‍‍ُ‍ول‌‍ٌ‌ كَ‍‍رِيمٌ
'An 'Addū 'Ilayya `Ibāda Allāhi ۖ 'Innī Lakum Rasūlun 'Amīnun 44-18 அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன். أَ‌نْ ‌أَ‌دُّ‌و‌ا‌ ‌إِلَيَّ عِب‍‍َ‍ا‌دَ‌ ‌اللَّ‍‍هِ ۖ ‌إِنِّ‍‍ي لَكُمْ ‌‍رَس‍‍ُ‍ولٌ ‌أَمِينٌ
Wa 'An Lā Ta`lū `Alá Allāhi ۖ 'Innī 'Ātīkum Bisulţānin Mubīnin 44-19 அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன். وَ‌أَ‌نْ لاَ‌ تَعْلُو‌ا‌ عَلَى‌ ‌اللَّ‍‍هِ ۖ ‌إِنِّ‍‍ي ‌آتِيكُمْ بِسُلْ‍‍طَ‍‍انٍ‌ مُبِينٍ
Wa 'Innī `Udhtu Birabbī Wa Rabbikum 'An Tarjumūni 44-20 அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன். وَ‌إِنِّ‍‍ي عُذْتُ بِ‍رَبِّي ‌وَ‌‍رَبِّكُمْ ‌أَ‌نْ تَرْجُمُونِ
Wa 'In Lam Tu'uminū Lī Fā`tazilūni 44-21 "மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்). وَ‌إِ‌نْ لَمْ تُؤْمِنُو‌ا‌ لِي فَاعْتَزِلُونِ
Fada`ā Rabbahu~ 'Anna Hā'uulā' Qawmun Mujrimūna 44-22 (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). "நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார். فَدَعَا‌ ‌‍رَبَّهُ~ُ ‌أَنَّ ه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ قَ‍‍وْمٌ‌ مُ‍‍جْ‍‍رِمُونَ
Fa'asri Bi`ibādī Laylāan 'Innakum Muttaba`ūna 44-23 "என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்.) فَأَسْ‍‍ر‍ِ‍‌ بِعِبَا‌دِي لَيْلا‌‌ ً‌ ‌إِنَّ‍‍كُمْ مُتَّبَعُونَ
Wa Atruki Al-Baĥra Rahwan ۖ 'Innahum Jundun Mughraqūna 44-24 அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்). وَ‌اتْرُكِ ‌الْبَحْ‍رَ‌ ‌‍رَهْو‌ا‌‌ ًۖ ‌إِنَّ‍‍هُمْ جُ‍‌‍ن‍‍د‌ٌ‌ مُ‍‍غْ‍رَقُ‍‍ونَ
Kam Tarakū Min Jannātin Wa `Uyūnin 44-25 எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்? كَمْ تَ‍رَكُو‌ا‌ مِ‍‌‍نْ جَ‍‍نّ‍‍َ‍اتٍ‌ ‌وَعُيُونٍ
Wa Zurū`in Wa Maqāmin Karīmin 44-26 இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்). وَ‌زُ‌ر‍ُ‍‌وعٍ‌ ‌وَمَ‍‍قَ‍‍ام‌‍ٍ‌ كَ‍‍رِيمٍ
Wa Na`matin Kānū Fīhā Fākihīna 44-27 இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்). وَنَعْمَة‌‍ٍ‌ كَانُو‌ا‌ فِيهَا‌ فَاكِهِينَ
Kadhālika ۖ Wa 'Awrathnāhā Qawmāan 'Ākharīna 44-28 அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம். كَذَلِكَ ۖ ‌وَ‌أَ‌وْ‌‍رَثْنَاهَا‌ قَ‍‍وْما‌‌ ً‌ ‌آ‍‍خَ‍‍رِينَ
Famā Bakat `Alayhimu As-Samā'u Wa Al-'Arđu Wa Mā Kānū Munžarīna 44-29 ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை. فَمَا‌ بَكَتْ عَلَيْهِمُ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءُ‌ ‌وَ‌الأَ‌رْ‍ضُ ‌وَمَا‌ كَانُو‌ا‌ مُ‍‌‍ن‍‍ظَ‍‍رِينَ
Wa Laqad Najjaynā Banī 'Isrā'īla Mina Al-`Adhābi Al-Muhīni 44-30 நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்; وَلَ‍قَ‍‍دْ‌ نَجَّيْنَا‌ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ مِنَ ‌الْعَذ‍َ‍‌ابِ ‌الْمُهِينِ
Min Fir`awna ۚ 'Innahu Kāna `Ālīāan Mina Al-Musrifīna 44-31 ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான். مِ‍‌‍نْ فِ‍‍رْعَ‍‍وْنَ ۚ ‌إِنَّ‍‍هُ ك‍‍َ‍انَ عَال‍‍ِ‍ي‍‍ا‌ ً‌ مِنَ ‌الْمُسْ‍‍رِفِينَ
Wa Laqadi Akhtarnāhum `Alá `Ilmin `Alá Al-`Ālamīna 44-32 நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம். وَلَ‍قَ‍‍دِ‌ ‌اخْ‍‍تَرْنَاهُمْ عَلَى‌ عِلْمٍ عَلَى‌ ‌الْعَالَمِينَ
Wa 'Ātaynāhum Mina Al-'Āyāti Mā Fīhi Balā'un Mubīnun 44-33 அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது. وَ‌آتَيْنَاهُمْ مِنَ ‌الآي‍‍َ‍اتِ مَا‌ ف‍‍ِ‍ي‍‍هِ بَلاَ‌ء‌ٌ‌ مُبِينٌ
'Inna Hā'uulā' Layaqūlūna 44-34 நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்; إِنَّ ه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ لَيَ‍‍قُ‍‍ولُونَ
'In Hiya 'Illā Mawtatunā Al-'Ūlá Wa Mā Naĥnu Bimunsharīna 44-35 "எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்." إِ‌نْ هِيَ ‌إِلاَّ‌ مَوْتَتُنَا‌ ‌الأ‍ُ‍‌ولَى‌ ‌وَمَا‌ نَحْنُ بِمُ‍‌‍ن‍‍شَ‍‍رِينَ
Fa'tū Bi'ābā'inā 'In Kuntum Şādiqīna 44-36 "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்." فَأْتُو‌ا‌ بِآب‍‍َ‍ائِنَ‍‍ا‌ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌دِقِ‍‍ينَ
'Ahum Khayrun 'Am Qawmu Tubba`in Wa Al-Ladhīna Min Qablihim ۚ 'Ahlaknāhum ۖ 'Innahum Kānū Mujrimīna 44-37 இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம். أَهُمْ خَ‍‍يْ‍‍رٌ‌ ‌أَمْ قَ‍‍وْمُ تُبَّعٍ‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمْ ۚ ‌أَهْلَكْنَاهُمْ ۖ ‌إِنَّ‍‍هُمْ كَانُو‌ا‌ مُ‍‍جْ‍‍رِمِينَ
Wa Mā Khalaq As-Samāwāti Wa Al-'Arđa Wa Mā Baynahumā Lā`ibīna 44-38 மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. وَمَا‌ خَ‍‍لَ‍‍قْ‍‍نَا‌ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضَ ‌وَمَا‌ بَيْنَهُمَا‌ لاَعِبِينَ
Khalaqnāhumā 'Illā Bil-Ĥaqqi Wa Lakinna 'Aktharahum Lā Ya`lamūna 44-39 இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். مَا‌ خَ‍‍لَ‍‍قْ‍‍نَاهُمَ‍‍ا‌ ‌إِلاَّ‌ بِ‍الْحَ‍‍قِّ ‌وَلَكِ‍‍نَّ ‌أَكْثَ‍رَهُمْ لاَ‌ يَعْلَمُونَ
'Inna Yawma Al-Faşli Mīqātuhum 'Ajma`īna 44-40 நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும். إِنَّ يَ‍‍وْمَ ‌الْفَ‍‍صْ‍‍لِ مِي‍‍قَ‍‍اتُهُمْ ‌أَجْ‍‍مَعِينَ
Yawma Lā Yughnī Mawlan `An Mawlan Shay'āan Wa Lā Hum Yunşarūna 44-41 ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். يَ‍‍وْمَ لاَ‌ يُ‍‍غْ‍‍نِي مَوْلىً‌ عَ‍‌‍نْ مَوْلى‌‌ ً‌ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَلاَ‌ هُمْ يُ‍‌‍ن‍‍صَ‍‍رُ‌ونَ
'Illā Man Raĥima Allāhu ۚ 'Innahu Huwa Al-`Azīzu Ar-Raĥīmu 44-42 (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். إِلاَّ‌ مَ‍‌‍نْ ‌‍رَحِمَ ‌اللَّ‍‍هُ ۚ ‌إِنَّ‍‍هُ هُوَ‌ ‌الْعَز‍ِ‍ي‍‍زُ‌ ‌ال‍رَّحِيمُ
'Inna Shajarata Az-Zaqqūmi 44-43 நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). إِنَّ شَجَ‍رَةَ ‌ال‍‍زَّ‍‍قُّ‍‍ومِ
Ţa`āmu Al-'Athīmi 44-44 பாவிகளுக்குரிய உணவு طَ‍‍ع‍‍َ‍امُ ‌الأَثِيمِ
Kālmuhli Yaghlī Fī Al-Buţūni 44-45 அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். كَالْمُهْلِ يَ‍‍غْ‍‍لِي فِي ‌الْبُ‍‍طُ‍‍ونِ
Kaghalyi Al-Ĥamīmi 44-46 வெந்நீர் கொதிப்பதைப் போல். كَ‍‍غَ‍‍لْيِ ‌الْحَمِيمِ
Khudhūhu Fā`tilūhu 'Ilá Sawā'i Al-Jaĥīmi 44-47 "அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். خُ‍‍ذ‍ُ‍‌وهُ فَاعْتِل‍‍ُ‍وهُ ‌إِلَى‌ سَو‍َ‍‌ا‌ءِ‌ ‌الْجَحِيمِ
Thumma Şubbū Fawqa Ra'sihi Min `Adhābi Al-Ĥamīmi 44-48 "பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ثُ‍‍مَّ صُ‍‍بُّو‌ا‌ فَ‍‍وْ‍قَ ‌‍رَ‌أْسِ‍‍هِ مِ‍‌‍نْ عَذ‍َ‍‌ابِ ‌الْحَمِيمِ
Dhuq 'Innaka 'Anta Al-`Azīzu Al-Karīmu 44-49 "நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! ذُ‍قْ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌الْعَز‍ِ‍ي‍‍زُ‌ ‌الْكَ‍‍رِيمُ
'Inna Hādhā Mā Kuntum Bihi Tamtarūna 44-50 "நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்). إِنَّ هَذَ‌ا‌ مَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ بِ‍‍هِ تَمْتَرُ‌ونَ
'Inna Al-Muttaqīna Fī Maqāmin 'Amīnin 44-51 பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். إِنَّ ‌الْمُتَّ‍‍قِ‍‍ي‍‍نَ فِي مَ‍‍قَ‍‍امٍ ‌أَمِينٍ
Fī Jannātin Wa `Uyūnin 44-52 சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). فِي جَ‍‍نّ‍‍َ‍اتٍ‌ ‌وَعُيُونٍ
Yalbasūna Min Sundusin Wa 'Istabraqin Mutaqābilīna 44-53 ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். يَلْبَس‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ سُ‍‌‍ن‍‍دُسٍ‌ ‌وَ‌إِسْتَ‍‍بْ‍‍‍رَقٍ‌ مُتَ‍‍قَ‍‍ابِلِينَ
Kadhālika Wa Zawwajnāhum Biĥūrin `Īnin 44-54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். كَذَلِكَ ‌وَ‌زَ‌وَّجْ‍‍نَاهُمْ بِح‍‍ُ‍و‌رٍ‌ عِينٍ
Yad`ūna Fīhā Bikulli Fākihatin 'Āminīna 44-55 அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். يَ‍‍دْع‍‍ُ‍ونَ فِيهَا‌ بِكُلِّ فَاكِهَة‌‍ٍ‌ ‌آمِنِينَ
Lā Yadhūqūna Fīhā Al-Mawta 'Illā Al-Mawtata Al-'Ūlá ۖ Wa Waqāhum `Adhāba Al-Jaĥīmi 44-56 முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். لاَ‌ يَذُ‌وقُ‍‍ونَ فِيهَا‌ ‌الْمَ‍‍وْتَ ‌إِلاَّ‌ ‌الْمَوْتَةَ ‌الأ‍ُ‍‌ولَى‌ ۖ ‌وَ‌وَ‍قَ‍‍اهُمْ عَذ‍َ‍‌ابَ ‌الْجَحِيمِ
Fađlāan Min Rabbika ۚ Dhālika Huwa Al-Fawzu Al-`Ažīmu 44-57 (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும். فَ‍ضْ‍‍لا‌ ً‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۚ ‌ذَلِكَ هُوَ‌ ‌الْفَ‍‍وْ‌زُ‌ ‌الْعَ‍‍ظِ‍‍يمُ
Fa'innamā Yassarnāhu Bilisānika La`allahum Yatadhakkarūna 44-58 அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். فَإِنَّ‍‍مَا‌ يَسَّرْن‍‍َ‍اهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُ‌ونَ
Fārtaqib 'Innahum Murtaqibūna 44-59 ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். فَا‌رْتَ‍‍قِ‍‍بْ ‌إِنَّ‍‍هُمْ مُرْتَ‍‍قِ‍‍بُونَ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah